கூட்டுறவு சங்கத் தேர்தலை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்த வேண்டும், அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கூட்டுறவு சங்கத் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த சேங்கைமாறன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என்என் 498 திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதியுடன் முடிந்தது. இதனால் 18 ஆயிரத்து 775 சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்புவனம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தேர்தலில் போட்டியிட வருகிற 9-ந்தேதி (அதாவது நாளை) வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மறுநாள் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், 16-ந்தேதி தேர்தலும் நடக்கிறது. அடுத்தநாள் (17-ந்தேதி) வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்.
கடந்த முறை திருப்புவனம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தேன். ஆனால் ஆளுங்கட்சியினர் தவறான காரணங்களை கூறி என் மனுவை நிராகரித்தனர். கோர்ட்டு உத்தரவிட்டும் முறையாக தேர்தல் நடக்கவில்லை. இதனால், நான் தேர்தலில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, இந்த தேர்தலில் அதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது. ஏனென்றால் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தலில் அதிகாரிகள் ஆளுங்கட்சி யினரின் மனுக்களை மட்டுமே ஏற்று, எதிர்க்கட்சியினரின் மனுக்களை நிராகரிக்கின்றனர். எனவே, கோர்ட்டு தலையிட்டு திருப்புவனம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது என்னுடன் வக்கீலை அழைத்துச் செல்லவும், வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வாக்குப் பதிவு என அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்யவும், தேர்தலுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
ஜனநாயக நாட்டில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. கூட்டுறவு சங்க விதிகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்தல் நடைமுறைகளை மீறி நடக்க முடியாது. எனவே திருப்புவனம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் அதிகாரிகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மாநில பொறுப்பாளர்களாகவும், அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சியினரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பலருடைய மனுக்களை தள்ளுபடி செய்து அ.தி.மு.க.வினரை மட்டும் தேர்வு செய்துள்ளனர். பல இடங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முதல் கட்ட தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சியினரை தேர்வு செய்துள்ளனர். இந்தநிலையில் தற்போது அடுத்த கட்ட தேர்தலுக்கு தயாராகி உள்ளனர். விதிமீறல்களும், முறைகேடுகளும் நடப்பது தெரிந்தும், புகார்கள் வந்தும் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் அதிகாரிகளை தங்களது பணியை செய்யவிடாமல் ஆளுங்கட்சியினர் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தன்னிச்சையான அமைப்பின் மூலம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியும். எனவே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக கடந்த மார்ச் 5-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பும், அதன்படி நடந்த தேர்தல்களும் சட்டவிரோதம். அந்த நடவடிக்கைகள் செல்லாது என்று அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Tags :
Next Story