மண்ணில் புதைந்து தொழிலாளி சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மண்ணில் புதைந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் தனியார் நிலத்தில் கட்டுமான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் அந்த நிலத்தில் மண்ணை சமப்படுத்தி கொண்டிருந்த போது தொழிலாளி முருகன் என்ற அருள்முருகன் (வயது 33) என்பவர் மீது மண்மேடு சரிந்து விழுந்தது. இதில் அவர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தார். அருள்முருகனுடன் பணியாற்றி வந்த சக தொழிலாளி நாகராஜ் (43) என்பவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இதைத்தொடர்ந்து அருள்முருகன் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் நேரம் ஆகி விட்டதால் உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வில்லை. இதனால் நேற்று காலை 10 மணிக்கு அருள்முருகன் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான பணிகள் நடைபெற்றன.
ஆனால் அருள்முருகன் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் இழப்பீடு தொகை வழங்கினால் மட்டுமே உடலை வாங்கி செல்வோம் என உறவினர்கள், சூண்டி பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம், சிவசங்கரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சிவராஜ் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
இதேபோல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் மூலம் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதை உறவினர்கள், கிராம மக்கள் ஏற்று கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அருள்முருகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மதியம் சுமார் 3 மணி அளவில் உறவினர்கள், கிராம மக்கள் உடலை வாங்கி சென்றனர். இதனால் பல மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனிடையே மண்ணுக்குள் புதைந்து தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நில உரிமையாளர் நாகராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story