காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.
அதன்படி காந்தி சிலை சிக்னலில் இருந்து தே.மு.தி.க.வினர் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை நோக்கி வந்தனர். பின்னால் ஒரு சரக்கு வாகனத்தில் விவசாயி ஒருவர் ஏர்கலப்பையை கொண்டு வந்தார். இதையொட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் போலீசார் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.
ஊர்வலமாக வந்த தே.மு.தி.க.வினர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்துக்கு கோவை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பனப்பட்டி தினகரன் தலைமை தாங்கினார். முற்றுகை போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட நிலத்தை ஏர்கலப்பையில் விவசாயி ஒருவர், கயிற்றை கட்டி தொங்க விட்டு நூதன போராட்டம் நடத்த முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தி, கயிற்றை அவரிடம் இருந்து பறித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஆத்திரம் அடைந்த தே.மு.தி.க.வினர் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 53 பேரை கைது செய்து, போலீஸ் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலகம், காந்தி சிலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஜெகன், பொருளாளர் முருகேசன், பொள்ளாச்சி நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், சக்திதேவ், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஹக்கீம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story