பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கக்கூடாது
சாலைகளிலும், நடைபாதைகளிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட்-அவுட்டுகள் வைக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆஜராகி, ‘சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கேயும், நடைபாதைகளிலும் பேனர், கட்-அவுட்டுகள் வைக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோரும், பாதசாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்’ என்று முறையிட்டார். மேலும், விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள், கட்-அவுட்டுகளை புகைப்படம் எடுத்து அவற்றையும் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஏ.செல்வம் ஆகியோர் தாமாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்துக் கொண்டனர். இதன்பின்பு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.
சாலைகளின் குறுக்கேயும், நடை பாதைகளின் குறுக்கேயும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட்-அவுட்டு, பதாகைகள் வைப்பது குற்றமாகும்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டாலும் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் அவை இருக்கக்கூடாது. பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் எந்த கட்-அவுட்டுகளும் சாலைகளில் அமைக்கக்கூடாது. இதை தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர், ராயப்பேட்டை, அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணி, கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story