காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய 68 தே.மு.தி.க.வினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சங்கரன்கோவிலில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 68 தே.மு.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் நெல்லை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் முத்துகுமார், நகர செயலாளர் ரத்தினகுமார்், பொதுக்குழு உறுப்பினர்கள் அயூப்கான், வேலாயுத பாண்டியன், மாரியப்பன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் குருவையா, ஒன்றிய செயலாளர்கள் அய்யன்ராஜ், ஆறுமுகச்சாமி, மாடசாமி, உதயகுமார் உள்ளிட்ட 68 பேர் கலந்து கொண்டனர். அனைவரையும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story