கரூரில் இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
கரூரில் இந்து சமய அற நிலைய துறை அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் அருகே நானபரப்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் கோவிலை இந்து சமய அறநிலைய துறை கடந்த 4 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறது. தக்காராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூச்சாற்றுதல் விழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தக்கார் ராதாகிருஷ்ணன் கோவிலில் திருவிழா நடத்த கூடாது எனவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பு திருவிழா நடத்த வேண்டும் எனவும், அதுவரை அனுமதி இல்லை என அறிவிப்பு நோட்டீசை கோவிலில் நேற்று ஒட்டினார். மேலும் இரு தரப்பினரிடமும் கையெழுத்து பெற்றார்.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்த தர்மகர்த்தா முத்துசாமி தலைமையில் சுரேஷ் மற்றும் அவருடன் மேலும் 2 பேர் நேற்று மாலை கரூரில் சாமிநாதபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திருவிழா நடத்தக்கூடாது என அறிவிப்பு நோட்டீசில் கையெழுத்து பெற்றதை திருப்பி வழங்க கோரியும், கோவில் பொறுப்பை மீண்டும் தங்களிடம் வழங்க கோரியும் சுரேஷ் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை பிடித்து தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் விரைந்து வந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story