வேலூர் சிறை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி சிறை போலீசாருக்கு எழுத்துத்தேர்வு
வேலூர் சிறை காவலர் பயிற்சி பள்ளியில் 127 புதிய சிறை போலீசாருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்,
மோப்பநாயை கையாளும் விதம், துப்பாக்கிச் சுடுதல், முதலுதவி சிகிச்சை முறை, கைதிகளை கையாளும் முறை உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர்களுக்கு எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் முதல், நடந்து வருகிறது. நேற்று 2–வது நாளாக உளவியல், முதலுதவி, சிறை காவலர் மேலாண்மை முறை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நடந்தது.
நாளை (திங்கட்கிழமை) மனித உரிமைகள், தகவல் உரிமை சட்டம், சிறைச்சாலை குறித்த தேர்வுகள், இளம்சிறார் குற்றம் குறித்தும், 10–ந் தேதி சட்டம் குறித்தும் தேர்வுகள் நடைபெற உள்ளது. வருகிற 27–ந்தேதியுடன் 6 மாத பயிற்சிகள் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து பயிற்சி சிறை போலீசாருக்கு 1 மாதம் சிறைகளில் செய்முறை பயிற்சி நடைபெற உள்ளது எனச் சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story