காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் சேலம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் விஜய் வரவேற்று பேசினார். மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார், துணை செயலாளர்கள் தங்கவேல், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தே.மு.தி.க. மாநில அவைத்தலைவர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராகவும், அதற்கு துணைபோகிற எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தே.மு.தி.க. போராட்டம் நடத்தி வருகிறது. 6 வாரகாலம் கெடுமுடிந்த பின்னர் வேண்டும் என்றே காலம்தாழ்த்தி ‘ஸ்கீம்‘ என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என சொல்வது கேலிகூத்தாக உள்ளது. மேலும் 15 ஆண்டுகளுக்கு அப்பீல் என்பதே கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதை கண்டுகொள்ளவில்லை. எனவே, மோடி அரசுக்கு விரைவில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தே.மு.தி.க. தொடர்ந்து போராட்டத்தை நடத்தும் என அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், திருஞானம், ஷாகுல் அமீது மற்றும் பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷமும் எழுப்பப்பட்டன

Related Tags :
Next Story