பெங்களூருவில், கடந்த ஒரு மாதத்தில் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக 1.12 லட்சம் பேர் சேர்ப்பு
பெங்களூரு நகர தேர்தல் அதிகாரியான மஞ்சுநாத் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 8 ஆயிரத்து 278 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 806 வாக்குச்சாவடிகளில் 1,400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
அதனால் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைத்தால், அங்கு பணியாற்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேவைப்படுவார்கள். வாக்காளர்களின் இறுதி பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு இருந்தாலும், வருகிற வருகிற 17-ந் தேதி வரை வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 825 பேர் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி மனு அளித்திருந்தனர். அவற்றில் 68 ஆயிரம் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 9 ஆயிரத்து 786 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக 1 லட்சத்து 12 ஆயிரம் பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெங்களூரு நகரில் மட்டும் ஒட்டு மொத்தமாக 3 லட்சத்து 55 ஆயிரத்து 250 பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள். அவர்களில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 482 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ளவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ‘வி.வி.பேட்‘ பயன்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் மூலம் பொதுமக்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுவரை 86 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

Related Tags :
Next Story