தேவகோட்டை அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் 4 பேர் கைது


தேவகோட்டை அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 April 2018 3:45 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே 2 தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் சிலையப்பன். இவருடைய மகன் கருப்பையா(வயது 21). இவர் ராமநாதபுரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான அடைச்சிவயல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(21), இறகுசேரியை சேர்ந்த ஸ்ரீராம்(21) ஆகியோருடன் கண்டதேவி ஊருணி பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ங்கு தேவகோட்டை ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் மகன் லெவின் சிந்தா(19) தனது நண்பர்களுடன் வந்துள்ளார். ஏற்கனவே லெவின் சிந்தாவுக்கும், கருப்பையா நண்பர் கார்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக மீண்டும் லெவின் சிந்தாவுக்கும், கார்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது கார்த்தியின் நண்பர்களும், லெவின் சிந்தாவின் நண்பர்களும் 2 தரப்பினராக மோதிக்கொண்டனர். இதில் கார்த்தி, கருப்பையா, ஸ்ரீராம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் கருப்பையா மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆறாவயல் போலீசார் விசாரணை நடத்தி லெவின் சிந்தா, அவரது நண்பர்கள் கண்டதேவி பிரபாகரன்(21), தாணிச்சாஊருணி அஷ்வத்குமார்(21), தேவகோட்டை ராம்நகர் இந்திரகண்ணன்(18), அரவிந்த்(19), ஆனையடி பாலமுருகன்(22), சபரிநாதன்(21), பிரதீப்(20), பிரவின்(21) ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இருந்த என்ஜினீயரிங் மாணவர் கருப்பையா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துபோனார். இதனையடுத்து ஆறாவயல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அதில் தொடர்புடைய பிரபாகரன், அஷ்வத்குமார், இந்திரகண்ணன், பாலமுருகன் ஆகியோரை கைதுசெய்தனர்.

லெவின் சிந்தா உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story