ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சூறாவளி காற்று: ஓடும் பஸ்சில் மேற்கூரை பெயர்ந்து சாலையில் விழுந்தது


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சூறாவளி காற்று: ஓடும் பஸ்சில் மேற்கூரை பெயர்ந்து சாலையில் விழுந்தது
x
தினத்தந்தி 9 April 2018 3:00 AM IST (Updated: 9 April 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சூறாவளி காற்று வீசியதில் ஓடும் பஸ்சில் மேற்கூரை பெயர்ந்து சாலையில் விழுந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம் ஆகிய பகுதிகளில் சாரல் மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதனால் கான்சாபுரம், அத்திதுண்டு ஆகிய பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழைமரங்கள் சாய்ந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள மாமரங்களில் இருந்து மாங்காய்களும் உதிர்ந்து விழுந்தன. சூறாவளி காற்றுக்கு கூமாபட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து சாலையில் விழுந்தது. நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. பெயர்ந்து விழுந்த மேற்கூரை ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனைக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டு அங்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு 7 மணியளவில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. 20 நிமிடம் நீடித்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெப்பம் தணிந்தது. 

Related Tags :
Next Story