காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது, அங்கிருந்த பெயர் பலகைகளில் இந்தி வார்த்தைகள் அழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை பூங்காநகர் ரெயில் நிலையத் தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப் பாட்டத்துக்கு கட்சியின் எழும்பூர் தொகுதி செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன், புகழகரசன், மாவட்ட தலைவர் தம்பி முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் திடீரென பூங்கா ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர். மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டபடி, ரெயில் நிலைய பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்தனர். ‘காவிரி வேண்டும்’ என ஆங்காங்கே கருப்பு பெயிண்ட் மூலம் எழுதினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து தாம்பரம்-கடற்கரை வழியாக இருமார்க்கமாகவும் மின்சார ரெயில் செல்லும் தண்டவாளத்தில் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக 40 நிமிடங்கள் மின்சார ரெயில் சேவை பாதித்தது.
முன்னதாக போராட்டம் குறித்து அய்யனார் நிருபர்களிடம் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விடமாட்டோம். தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுப்போம் ” என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில், சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு சென்ற மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியினர் 25 பேரை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர். அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story