காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2018 4:00 AM IST (Updated: 9 April 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருமானூரில் மாடுகளுடன் மனித சங்கிலி போராட்டம்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள காணிக்கைபுரம் ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம், மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் நீதிமன்றம் அறிவித்தது போல் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கல்லணை முதல் கீழணை வரை கதவணையுடன் கூடிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன், துணைத்தலைவர் பிச்சைப்பிள்ளை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாம்பசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் தங்களது கால்நடைகளுடன் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story