நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் 28 பேர் கைது
கம்பத்தில், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்தனர். அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக அக்கட்சியை சேர்ந்த 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்,
கம்பத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் முகமது ரியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் கலீல் ரகுமான் முன்னிலை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கரீம் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பள்ளி வாசல் வழியாக தலைமை தபால் நிலையம் அருகே வந்தது. அப்போது உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் கம்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்கள் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலத்தில் வந்த மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அவர்களை மாலையில் போலீசார் விடுவித்தனர்.

Related Tags :
Next Story