பழனி அருகே ரேஷன் கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு போலீஸ் விசாரணை
கோதைமங்கலம் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி,
பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு ரேஷன் கடை பணியாளர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை அவர்கள் கடையை திறப்பதற்காக வந்தனர். அப்போது கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதை பார்த்தனர்.
உடனே உள்ளே சென்று அவர்கள் பார்த்த போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட சர்க்கரை மூட்டைகளில் 5–ம், பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றதையறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தாலுகா போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கடையை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கடையின் கதவு மற்றும் பிற இடங்களில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story