திருமக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலி


திருமக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலி
x
தினத்தந்தி 9 April 2018 4:15 AM IST (Updated: 9 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமக்கோட்டை,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா பழஞ்சூர் புதுக்கோட்டை உளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி ஜெயசுதா. இவர்களுடைய மகன் ஹரிஹரன் (வயது 19). இவர் திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள இடையர்நத்தம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். சாமிநாதன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஹரிஹகரன் தனது நண்பர்கள் 4 பேருடன் கல்லூரி விடுதிக்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துள்ளார். அப்போது கிணற்றில் ஹரிஹகரன் மூழ்கிவிட்டார். இதனால் நண்பர்கள் 3 பேரும் அவரை கிணற்றில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்து ஹரிஹரன் உடலை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, திருமக்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story