காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமருக்கு 10 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பப்படும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு 10 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பப்படும் என ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் முத்துசாமி தெரிவித்தார்.
கரூர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாடு கரூரில் நாரதகானசபாவில் நேற்று நடந்தது. மாநாட்டை மாநில தலைவர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
தமிழகத்தில் காவிரி ஆறு பாலைவனமாக காட்சியளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. ஆசிரியர்கள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 லட்சம் தபால் அட்டைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் ஒரு ஆசிரியர்கள் 25 முதல் 100 தபால் அட்டை வரை அனுப்புவார்கள். பொதுமக்களிடமும் கையெழுத்து பெற்று அனுப்பப்படும்.
தபால் அட்டையில் தமிழில் தான் எழுதப்படும். உலகில் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அவரது அலுவலகத்தில் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியாற்றுகிறார். அஞ்சல் அட்டையில் உள்ள கோரிக்கையை அவர் பிரதமரிடம் எடுத்து கூறி புரிய வைத்துவிடுவார். ஒரு வார காலத்திற்குள் 10 லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பி முடிக்கப்படும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்தது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் அறிவாளிகளே இல்லை என்பதை போல வேறு மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்துள்ளனர். சீனாக்காரர்களும் கெட்டிக்காரர்கள் தான் அதற்காக சீனா நாட்டை சேர்ந்தவரை நியமிப்பார்களோ?. தமிழை பெயராக கொண்ட டாக்டர் தமிழிசையை துணைவேந்தராக நியமித்திருந்தால் கூட பெருமை அடைந்திருப்போம்.
இடைநிலை ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு முத்துசாமி கூறினார்.
முன்னதாக மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி மாநாட்டு அறிக்கையை வாசித்தார்.
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளதை போல ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநாட்டு தலைவர் சுந்தரகணேசன், பொது செயலாளர் செல்வராசு, மாநில துணை தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story