காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி ஆற்றில் அமர்ந்து போராட்டம் 29 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குளித்தலை காவிரி ஆற்றில் அமர்ந்து போராட்டம் நடத்திய 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து குளித்தலை கடம்பந்துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அமர்ந்து நேற்று காலை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு முத்துசெல்வன் தலைமை தாங்கினார். இதில் தமிழக மக்களை காக்க காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
29 பேர் கைது
காவிரி ஆற்றில் போராட்டம் நடப்பதை அறிந்த குளித்தலை போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர். போராட்டம் நடத்த அனுமதி பெறவில்லை எனவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக அனைவரையும் கைது செய்வதாக கூறினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை மட்டும் கைது செய்து காவிரி ஆற்றில் இருந்து அழைத்து சென்று குளித்தலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story