சாமிதோப்பு அருகே விமான நிலைய பணிகள் தொடங்குவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சாமிதோப்பு அருகே விமான நிலைய பணிகள் எப்போது தொடங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தென்தாமரைகுளம்,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களில் பலர் நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்துக்கு விமான மூலம் வந்து அங்கிருந்து வாகனங்களில் கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். மேலும், கன்னியாகுமரியில் இருந்து வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறபட்டு செல்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், குமரி மாவட்ட மக்களும் மிகுந்த பயன் பெறுவார்கள். எனவே, இங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இடம் தேர்வு
இதையடுத்து குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இறுதியில் சாமிதோப்பு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளங்கள் உள்ளன. சமீப காலமாக வெளி மாவட்டத்தில் உள்ள உப்புகள் குமரி மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்படுவதாலும், போதிய விலை கிடைக்காததாலும் குமரி மாவட்டத்தில் உப்பளத்தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால், உப்பளங்கள் தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன. எனவே, இந்த இடங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்காது என்பதால் சாமிதோப்பில் விமான நிலையம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இங்கு உலகத்தரம் வாய்ந்த மாசு கட்டுப்பாட்டுடன், உயர் தொழில்நுட்பத்துடன் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், 2 ஆண்டுகளில் விமான நிலைய பணிகள் நிறைவு பெற்று விமான சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அளவீடு பணி
இந்தநிலையில் விமான நிலையத்துக்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுப்பணி மற்றும் நில அளவீடு பணிக்காக தமிழக அரசு ரூ.11½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. நிலம் அளவீடு செய்யும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உயர் தொழில் நுட்பத்துடன் செயற்கைகோள் மூலம் இந்த அளவீடு பணிகள் நடைபெற்றது.
அளவீடு பணிகள் நிறைவு பெற்று எல்லைகள் குறிக்கப்பட்டது. இந்த அளவீடு பணிகள் நிறைவு பெற்றதும் அறிக்கை தயார் செய்து, டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையக்குழுவிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படும் என்றும், பின்னர், மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கனவு நனவாகுமா?
இந்தநிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான அளவீடு பணிகள் முடிவடைந்து 6 மாதங்கள் ஆகியும் அரசு அதிகாரிகளிடம் இருந்தோ, அரசிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை. இதனால், குமரி மாவட்ட மக்களின் மனதில் விமான நிலையம் வருமா? வராதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நமது நீண்ட நாள் கனவு நனவாகுமா?, விமான நிலைய பணிகள் தொடங்குவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது. இதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

Related Tags :
Next Story