தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், சரக்கு கையாளுவதில் புதிய சாதனை


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், சரக்கு கையாளுவதில் புதிய சாதனை
x
தினத்தந்தி 9 April 2018 4:00 AM IST (Updated: 9 April 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கடந்த நிதியாண்டில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 969 மெட்ரிக் டன் மாட்டு தீவனம் கையாளப்பட்டு இருந்தது. இந்த நிதியாண்டில் 23 ஆயிரத்து 953 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாளப்பட்டு உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இறக்குமதியாகும் மாட்டு தீவனமானது கால்நடை பண்ணைகளுக்கும் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மாட்டு தீவனம் உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் ஒரே நாளில் 10 ஆயிரத்து 748 டன் மாட்டு தீவனம் கையாளப்பட்டு இருந்தது. இந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 3-ந் தேதி மேரே கிளோவிடா என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 14 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் மாட்டு தீவனம் கையாண்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இந்த சாதனை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்களை வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் பாராட்டினார். தொடர்ந்து வரும் காலங்களில் இது போன்ற பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த தகவலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

Next Story