கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் காத்திருப்பு
அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நகராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட நகராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஆணையின்படி நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வீரய்யா போராட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கிராம ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு மாத ஊதியமாக ரூ.11 ஆயிரத்து 236-ம், துப்புரவு தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.9 ஆயிரத்து 234-ம் வழங்க கடந்த 2017-ம் ஆண்டில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 1,500 மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும், 250 தூய்மைப்பணி காவலர்களுக்கும் அரசு ஆணைப்படி ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த மாதம் 12-ந்தேதி மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் அதன்பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்களுடன் அமர்ந்திருந்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story