வேளாண்மை துறை சார்பில் மேம்பாட்டு பணிகள்; கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நயினார்கோவில்,
வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நயினார்கோவில் யூனியன் வயலூர் கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் வயலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேன் கூடுகள் வளர்ப்பு, மெழுகு தயாரித்தல் பயிற்சியை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் வயலூர் கிராமத்தை சேர்ந்த 5 விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய வேளாண்மை உபகரணங்களை வழங்கினார்.
இதேபோல ராமநாதபுரம் யூனியன் பெருவயல் கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிர் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ஒரு விவசாயிக்கு ரூ.10,000 மதிப்பிலான அரசு மானியத்தில் நெல் மற்றும் பயறு விதைகளும் ரூ.13,500 மதிப்பிலான அரசு மானியத்தில் 10 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் நடராஜன் பெருவயல் கிராமத்திற்கு நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட விவசாயிடம் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பராமரிப்பு மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் பலன் பற்றி கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து சித்தார்கோட்டை கிராமத்தில் 2016-17-ம் நிதியாண்டில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் தென்னை மர வறட்சி பாதிப்பு குறித்து வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கணக்கெடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக புத்தேந்தல் கிராமத்தை சார்ந்த 15 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் காதர் சுல்தான், உதவி பொறியாளர் செல்வம் உள்பட பலர் உடன் சென்றனர்.

Related Tags :
Next Story