தலித் பிரிவினர் மீதான வன்முறையை கண்டித்து கூடலூரில் திருநாவுக்கரசர் உண்ணாவிரதம்
தலித் பிரிவினர் மீதான வன்முறையை கண்டித்து கூடலூரில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றார்.
கூடலூர்,
தலித் பிரிவினர் மீதான வன்முறையை கண்டித்து நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூர் காந்தி திடலில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். இதில், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கோவை முன்னாள் மேயர் வெங்கடாசலம் உள்பட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். உண்ணாவிரத மேடையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், சாதி, மதங்களை கடந்த கட்சி காங்கிரஸ். எஸ்.சி., எஸ்.டி. சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றினால் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பழைய சட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் பினாமி மற்றும் ஊழல் ஆட்சி நடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என தி.மு.க.- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராடி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பயனற்ற ஆட்சி நடைபெறுவதால் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடை பெறுவது இல்லை.காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்காமல் மே 3-ந் தேதிக்குள் புதிய செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் காவிரிக்காக அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருநாவுக்கரசர் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி நடந்து வரு கிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக கவர்னரை சந்திக்க உள்ளோம். ஐ.பி.எல். போட்டிகள் நடத்தக்கூடாது என்று அரசியல் கட்சியினர் சொல்வது காவிரி நீர் பிரச்சினை திசை திரும்பி போகாமல் இருப்பதற்கே ஆகும்.
தற்போது தமிழக அரசு பலவீனமாக உள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வந்து விட்டால், தமிழகத்தில் ஆட்சி கலைய வாய்ப்பு உள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல்கள் பல இடங்களில் முறையாக நடக்க வில்லை. உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை வாங்காமல் முறைகேடு செய் கிறார்கள். வாங்கிய மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. ஆகவே, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமிக்கக்கூடாது. தமிழகத்தில் தான் என்ஜினீயரிங் கல்லூரி, சட்டக்கல்லூரி அதிகளவில் உள்ளது. ஏதோ ஒரு சில துணை வேந்தர்கள் மீது வழக்கு உள்ளதாக கூறி எல்லாரையும் குறைகூற முடியாது. அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. கோடை காலங்களில் ஏரி, குளம் மற்றும் ஆறு பகுதிகளில் மராமத்து பணிகளை மேற்கொண்டு தூர்வார வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் மராமத்து பணிகளை ஒப்படைக்கக்கூடாது. அரசே மேற்கொள்ள வேண்டும்.

Related Tags :
Next Story