கவர்னருக்கு என தனி அதிகாரம் கிடையாது: எந்த காலத்திலும் உரிமையை விட்டுத்தர மாட்டோம் - நாராயணசாமி
கவர்னருக்கு என்று தனி அதிகாரம் எதுவும் கிடையாது. எந்த காலத்திலும் நமது உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்று காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி,
புதுவை மறைமலையடிகள் சாலையில் சுதேசி மில் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரத பேராட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு புதிதாக எந்த நலத்திட்டங்களையும் கொண்டுவரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஏற்கனவே இருந்த திட்டங்களையே பெயர்களை மாற்றி அறிவித்தனர். நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கல்வித்தரத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக ‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தினார். இது தென்மாநில மக்களை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
வடமாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். பாரதீய ஜனதா மண்ணை கவ்வப்போகிறது. பாரதீய ஜனதா கட்சிகளின் கூட்டணி கட்சிகள் வெளியேறி வருகிறது. அவை காங்கிரஸ் கட்சியை நோக்கி வருகின்றன. வடமாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தையும் அரவணைத்து வருகிறது. 2019-ல் ராகுல்காந்தி இந்திய நாட்டின் பிரதமராவார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தலித் மக்களுக்கான வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போக செய்துள்ளனர். இதனால் இந்தியாவில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து, இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளோம்.
காவிரி நீர் பிரச்சினையில் புதுச்சேரி அரசு மட்டும் 2 தீர்ப்புகளை பெற்றுள்ளது. நமக்கு கிடைக்க வேண்டியது 6 டி.எம்.சி.க்கு பதிலாக 7 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. காரைக்கால் கடைமடை விவசாயிகள் 5 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர் வைக்கவும் தீர்ப்பு வந்தது.
மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவதற்கான கோப்பை கவர்னர் கிரண்பெடி அனுமதிக்க மறுத்தார். அவர், புதுவை மாநிலத்தின் கவர்னரா? மத்திய அரசின் ஏஜெண்டா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கலாம். ஆனால், மாநில உரிமைகளை தட்டிப் பறிக்க உறுதுணையாக இருக்கக் கூடாது. இதனை மக்கள் மன்றத்தில் கூறுவதை தவிர வேறு வழியில்லை. மக்கள் தான் நம்முடைய பிரதிநிதிகள்.
இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினோம். அனைவரும் கேட்கிறார்களே தவிர பதில் சொல்லவில்லை. எந்த காலத்திலும் நமது உரிமையை விட்டு தரமாட்டோம். புதுச்சேரி மாநிலம் டெல்லி அல்ல. தமிழகத்திற்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை புதுச்சேரி மக்களுக்கும், அமைச்சரவைக்கும் உள்ளது.
சட்டம்-ஒழுங்கு, நிதி நிலை, நிலம், நிர்வாகம் முழுவதும் மாநில சட்டமன்றத்திற்குட்பட்டது. கவர்னர் மாநில சம்பந்தமான பிரச்சினைகள், திட்டங்களுக்கு அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் தான் செயல்பட வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து எடுக்கப்படும் திட்டங்களுக்கு முதல்-அமைச்சரின் பரிந்துரைப்படி கவர்னர் செயல்பட வேண்டும். கவர்னருக்கு என்று தனியாக அதிகாரம் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story