சமூக நல்லிணக்கத்தை பேணிக்காத்திட வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரசார் உண்ணாவிரதம்
சமூக நல்லிணக்கத்தை பேணிக்காத்திட வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுச்சேரி,
வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தலித் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைக்கண்டித்தும், நாட்டில் சமூக நல்லிணக்கத்தை பேணிகாத்திட வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடத்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டார். அதன்படியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் புதுச்சேரியில் சுதேசி மில் அருகே நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்காக அங்கு பிரமாண்டமான சாமியான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நீல.கங்காதரன் முன்னிலை வகித்தார். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.
உண்ணாவிரதத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கலந்து கொண்டு பேசினார். மேலும் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி, முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறுமுகம், வினாயமூர்த்தி, தேவதாஸ், தனுசு, சாம்ராஜ், கண்ணபிரான், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. அமைப்பாளர்களான சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், பா.ம.க.வின் புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ், புதிய நீதிக்கட்சி பொன்னுரங்கம், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி, படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் தங்கம் உள்பட பலர் வாழ்த்திப் பேசினார்கள்.
உண்ணாவிரதத்தில் ஏராளமான காங்கிரசார் அணிஅணியாக வந்து கலந்து கொண்டனர். இதில் பேசிய தலைவர்கள் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story