புதுவை பஸ் நிலையம் அருகே தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு, ஓட்டல் தொழிலாளி கைது
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. இதுதொடர்பாக ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை பஸ் நிலையம் அருகே உள்ள முத்தமிழ் நகரில் மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்தும், தலித் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க கோரியும் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு புதுவை மாநில தி.மு.க. தெற்கு அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், ம.தி.மு.க., புதிய நீதி கட்சி, இந்திய குடியரசு கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இரவு 7.30 மணியளவில் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி பேசிக் கொண்டு இருந்தார். அப்போது மேடைக்கு பின்னால் இருந்த வாலிபர் ஒருவர் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி துணியால் திரி போட்டு குண்டு போல் தயாரித்து மேடையை நோக்கி வீசினார். இதில் அந்த பெட்ரோல் குண்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர் மீது விழுந்து சிதறி தீப்பிடித்தது.
யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று கூட்ட மேடையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு வந்து இருந்த கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் அந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அந்த வாலிபரின் சட்டை கிழிந்தது. இதன்பின் அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுக்கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
பிடிபட்ட வாலிபரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வேல்முருகன் (வயது34) என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்து ஓட்டல் ஒன்றில் சேர்ந்து வேலைபார்த்து வந்துள்ளார்.
குடிபோதையில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வேல்முருகனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, கோவி.செழியன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணைச்செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

Related Tags :
Next Story