மின்கட்டண உயர்வை கண்டித்து மின்துறை தலைமை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து புதுவையில் மின்துறை தலைமை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 84 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த 1-ந் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப்பெற கோரியும் பா.ஜனதா கட்சியினர் நேற்று வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் நாகராஜ், முருகன், லட்சுமி, மவுலித்தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் லாந்தர் விளக்கை கையில் ஏந்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் திடீரென மின்துறை அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 84 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story