ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஈரோட்டில் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஈரோடு,
மத்திய அரசை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதன்படி ஈரோடு மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மாநில துணைத்தலைவர் பி.என்.நல்லசாமி, பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இதில் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜேந்திரன், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாட்சா, மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், அயுப்அலி, திருச்செல்வம், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

Related Tags :
Next Story