இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முன்னோடி


இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முன்னோடி
x
தினத்தந்தி 10 April 2018 4:00 AM IST (Updated: 10 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

சேலம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஸ்ரீரெங்கசுவாமி கல்வி அறக்கட்டளையின் எக்ஸல் கல்வி நிறுவனம் சார்பில் 16-வது ஆண்டாக கல்வி ஆலோசனை மற்றும் கண்காட்சி சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை நடந்த கண்காட்சி நேற்று மாலை நிறைவு பெற்றது. கண்காட்சி மற்றும் ஆலோசனை முகாமில் பொறியியல், கலை அறிவியல், ஓட்டல் நிர்வாகம், பார்மசி, பிசியோதெரபி, ஹெல்த் சயின்ஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட இதர தொழில் கல்வி குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு தங்களது எதிர்கால பட்டமேற்படிப்பு கல்வி குறித்து ஆலோசனை பெற்றனர். 3 நாள் நடந்த கல்வி முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நேற்று மாலை கல்வி கண்காட்சி நிறைவு விழா நடந்தது. எக்ஸல் கல்வி நிறுவன தலைவர் ஏ.கே.நடேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மதன்கார்த்திக், நிர்வாக அறங்காவலர் பார்வதி நடேசன், தாளாளர் கவியரசு, மக்கள் தொடர்பு மேலாளர்கள் கமல், மாரியப்பன், பேராசிரியர் எம்.கே.நாகேஸ்வரன், நிர்வாக அதிகாரி கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு, சிறந்த அரங்குகளுக்கான பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 48.9 சதவீதத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது. கல்வித்தரம், வேலைவாய்ப்பை தேடித்தரக்கூடிய கல்வி நிறுவனங்களில் கொங்கு மண்டலம் முன்னோடியாக திகழ்கிறது. இங்கு நடத்தப்பட்ட கல்வி கண்காட்சி மூலம் மாணவ-மாணவிகளிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Next Story