‘திருக்குறள் களஞ்சியம்’ புத்தகம் வெளியீடு சென்னை ராஜ்பவனில் கவர்னர் வெளியிட்டார்


‘திருக்குறள் களஞ்சியம்’ புத்தகம் வெளியீடு சென்னை ராஜ்பவனில் கவர்னர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 10 April 2018 3:20 AM IST (Updated: 10 April 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ‘திருக்குறள் களஞ்சியம்’ என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.

சென்னை, 

சென்னை ராஜ்பவனில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ‘திருக்குறள் களஞ்சியம்’ என்ற புத்தகத்தினை வெளியிட்டார். அப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பல அறிஞர்கள் கூறிய கருத்துரைகளின் தொகுப்பாக இந்த புத்தகம் விளங்குகிறது. திருக்குறள் உலக பொதுமறை. திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை. ஒருவர் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமானால் திருக்குறளை அவசியம் படிக்க வேண்டும். நான்கு வேதங்கள், பகவத் கீதை இவற்றில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதே கருத்துகள் திருக்குறளிலும் வலியுறுத்தப்படுகின்றன. திருக்குறள் இனம், மதத்தை கடந்தது.

இந்த புத்தகத்தில் பல அறிஞர்களின் உரை, முன்னுரை தொகுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உரையும் உள்ளது. இளைஞர்கள், திருக்குறள் ஆய்வாளர்கள் படிப்பதற்கு ஏற்ற புத்தகம் இது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ‘திருக்குறள் களஞ்சியம்’ புத்தக தொகுப்பாளர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், பதிப்பாளர் பி.டி.டி.ராஜன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை பெற்றுக்கொண்டனர். 

Next Story