மோட்டார் சைக்கிள் வடிவமைத்து கொடுத்தவர் திருட்டு வழக்கில் கைது


மோட்டார் சைக்கிள் வடிவமைத்து கொடுத்தவர் திருட்டு வழக்கில் கைது
x
தினத்தந்தி 10 April 2018 4:25 AM IST (Updated: 10 April 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

இந்திப்பட சண்டை காட்சிகளுக்கு வித்தியா சமான மோட்டார் சைக்கிள்களை வடிவ மைத்து கொடுத்தவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 66

+மும்பை,

மும்பை குற்றப்பிரிவு போலீசார் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆசிப்கான் என்பவரை கைது செய்தனர். ஆசிப் கான் பாந்திராவில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய சாகில், ஆரிப், மிலிந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் தாராவியில் மெக்கானிக்காக உள்ளனர். போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 50 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் கடந்த ஆண்டில் மட்டும் 100 மோட்டார் சைக்கிள்களை திருடி இருப்பார்கள் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-


ஆசிப்கான் பழைய மோட்டார் சைக்கிள்களை புதிய டிசைன்களில் வடிவமைப்பதில் வல்லவராக இருந்துள்ளார். அவர் ஆரிப், மிலிந்த், சாகில் ஆகியோர் திருடி வரும் மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களை பிரித்து எடுப்பார். பின்னர் அவர் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் மோட்டார் சைக்கிள்களில் திருட்டு மோட்டார் சைக்கிள் களின் உதிரி பாகங்களை பொருத்தி அதிகளவு பணம் சம்பாதித்து உள்ளார்.

இதேபோல ஆசிப்கான் ‘‘கன்டே'' உள்ளிட்ட பல இந்தி படங்களில் வரும் சண்டை காட்சிகளுக்கு தேவையான மோட்டார் சைக்கிள்களை வித்தியாசமாக வடிவமைத்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

Next Story