தினம் ஒரு தகவல் : விலங்குகளின் நலனுக்காக போராடிய ரூத் ஹாரிசன்
செயற்கையான வேதி உரங்களால் பயிர்கள் அதிவேகமாக வளர்க்கப்படுவதைப் போல, செயற்கையாக மேற்கொள்ளப்படும் கால்நடைப் பண்ணை வெளிநாடுகளில் பிரபலம். அதை தொழிற்சாலை பண்ணை என்று அழைக்கிறார்கள்.
சுதந்திரமாக உலவ வேண்டிய ஆடு, கோழி ஆகியவற்றை ஒரு கொட்டடியில் அடைத்து வைப்பார்கள். அவற்றுக்கு வலுக்கட்டாயமாக உணவு அளித்து, முறையான காற்றோட்டம், வெளிச்சம் இல்லாமல் வளர்ப்பதுதான் தொழிற்சாலைப் பண்ணையின் முக்கிய அம்சம். குறுகிய காலத்தில் அதிக லாபத்தை பார்த்துவிட வேண்டும் என்ற பேராசைதான் இதற்குக் காரணம்.
பொதுவாக, இயற்கை முறையில் வளரும் ஒரு கோழி, நன்கு வளர்ந்து கொழுத்து முட்டையிட சுமார் 6 மாதங்கள் பிடிக்கும் என்றால், அவற்றை செயற்கை முறையில் வளர்த்துக் கொழுக்க வைக்க 3 மாதங்களே போதும். பிராய்லர் கோழிகளை வளர்க்கும் ஆசை துளிர்விட, இந்த ஒரு காரணம் போதாதா?
ஆனால், அப்படிக் குறுகிய காலத்தில் ஒரு பிராணியை வளர்ப்பது, அதன் வாழ்வுரிமையை பறிப்பதற்கு ஈடானது. மனிதர்களின் நலன் எப்படி முக்கியமோ அதேபோல விலங்குகளின் நலனும் முக்கியம். இப்படியொரு சிந்தனையை முன் வைத்தவர்தான் ரூத் ஹாரிசன். 1961-ம் ஆண்டு, ‘அனைத்து விலங்குகளின் மீதான கொடுமைக்கு எதிரான யுத்தம்‘ எனும் விலங்கு நல உரிமைக் குழுவின் துண்டறிக்கை ஒன்று அவர் கைகளில் கிடைத்தது.
அதுவே அவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அந்த துண்டறிக்கையில் தொழிற்சாலைப் பண்ணை விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்துச் சொல்லப்பட்டிருந்தது. அதைப் படித்து மனம் உடைந்த ரூத், அந்த விலங்குகளின் நலனுக்காக ஏதாவது செய்யத் துடித்தார். சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருந்தாலும், அந்த விலங்குகளின் நலன் மீது தனக்குப் பொறுப்பு இருப்பதாக நினைத்தார். விலங்குகளுக்காகப் போராட தொடங்கினார்.
ரூத் ஹாரிசன் அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அன்று பிரிட்டனில் இருந்த பல தொழிற்சாலை பண்ணைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் விளைவாக, 1964-ம் ஆண்டு ‘அனிமல் மெஷின்ஸ்‘ புத்தகத்தை எழுதினார். கார்சனின் ‘மவுன வசந்தம்‘ வெளியான பிறகு எப்படிப் பூச்சிக்கொல்லிகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதோ, அதேபோல ‘அனிமல் மெஷின்ஸ்‘ வெளிவந்த பிறகு தொழிற்சாலைப் பண்ணையில் விலங்குகளுக்கு நேரும் துன்பங்கள் பற்றி மக்களுக்குத் தெரியவந்தது.
அந்தப் பண்ணைகளில் விலங்குகளின் வால்கள் வெட்டப்படுவது, அலகுகள் நறுக்கப்படுவது, விதைப் பைகள் சிதைக்கப்படுவது, கொம்புகள் நீக்கப்படுவது உள்ளிட்ட பல கொடுமைகள் நிகழ்வதை ஹாரிசனின் புத்தகம் மூலம் அறிந்த மக்கள் கொதித்துப் போனார்கள். அதைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்களின் விளைவாக, 1968-ம் ஆண்டு பிரிட்டனில் தொழிற்சாலைப் பண்ணை விலங்குகளின் நலன் தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டது.

Related Tags :
Next Story