வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான உத்தரவை ரத்துசெய்ய கோரி கள்ளக்குறிச்சியில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய கோரி கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கடந்த சில தினங்களாக ரெயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய கோரி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் ஆனந்தன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபால் முன்னிலையில், இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் மனமோகதாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பொன்னிவளவன், பாலு, ராமமூர்த்தி, வேல்மணி, இனியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story