வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: 6 அரசு அதிகாரிகளின் வீடு-அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் 6 அரசு அதிகாரிகளின் வீடு-அலுவலகங்களில் நேற்று ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரு,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் 6 அரசு அதிகாரிகளின் வீடு-அலுவலகங்களில் நேற்று ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூரு உள்பட 22 இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன.
6 அரசு அதிகாரிகள்
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கர்நாடக மின்பகிர்மான கழகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் மல்லிகார்ஜுன் சவனூர். தார்வார் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் பரிஷ்வநாத். உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக செயல்பட்டு வருபவர் ரவி சங்கர்.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட ஹெம்மிகேபுரா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் சிவக்குமார். மைசூரு மாநகராட்சியின் குடிநீர் வாரிய ஆய்வாளராக செயல்படுவர் கிருஷ்ணகவுடா. தாவணகெரே மாவட்டம் ஜகலூர் அருகே குருசித்தபுரா மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாகவும், ஹிரேமல்லனாஹோல் மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாகவும் (பொறுப்பு) செயல்பட்டு வருபவர் நாகராஜ்.
வீடு, அலுவலகங்களில் சோதனை
இவர்கள் அனைவரும் தங்களின் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் தடுப்பு படைக்கு புகார்கள் சென்றன. இந்த புகார்களின் பேரில் நேற்று ஒரே நாளில் 6 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனை பெங்களூரு உள்பட 22 இடங்களில் நடந்தது.
அவர்களின் வீடு, அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை பரிசீலனை செய்தனர். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகளின் மதிப்புகள் கணக்கிடப்பட்டன. இந்த சோதனைகள் நேற்று இரவு வரை நீடித்தது. சோதனையின் முடிவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்த முக்கிய ஆவணங்களை ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

Related Tags :
Next Story