தேர்தலையொட்டி 965 பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.3 கோடி பின்தேதியிட்ட காசோலைகள் பறிமுதல்


தேர்தலையொட்டி 965 பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.3 கோடி பின்தேதியிட்ட காசோலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 April 2018 5:29 AM IST (Updated: 11 April 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலையொட்டி 965 பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான பின்தேதியிட்ட காசோலைகளை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

கோலார் தங்கவயல்,

தேர்தலையொட்டி 965 பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான பின்தேதியிட்ட காசோலைகளை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

காசோலைகள்

கோலார் மாவட்டத்திற்கு உட்பட்டது சீனிவாசப்பூர் தொகுதி. இந்த தொகுதி மந்திரி ரமேஷ் குமாரின் சொந்த தொகுதி ஆகும். இந்த நிலையில் நேற்று இத்தொகுதிக்கு உட்பட்ட 79 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 965 பெண்களுக்கு பின் தேதியிட்ட காசோலைகள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி என்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மேலும் இது தேர்தலையொட்டி பெண்களின் ஓட்டுகளை கவருவதற்காக வழங்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 965 காசோலைகளையும் பறிமுதல் செய்தனர். அப்போது அந்த காசோலைகள் அனைத்தும் கோலார் மாவட்ட கூட்டுறவு வங்கியின் காசோலைகள் என்று தெரியவந்தது.

பரபரப்பு

பின்னர் இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள், சீனிவாசப்பூர் போலீசில் புகார் செய்தனர். மேலும் காசோலைகளையும் ஒப்படைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் சீனிவாசப்பூர் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story