பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியது டிரைவர் உள்பட 2 பேர் பலி தகானு அருகே பரிதாபம்


பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியது டிரைவர் உள்பட 2 பேர் பலி தகானு அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 11 April 2018 5:37 AM IST (Updated: 11 April 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

தகானு அருகே பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வசாய்,

தகானு அருகே பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பஸ் மீது லாரி மோதியது

குஜராத் மாநிலம் அம்ரேலியில் இருந்து மும்பைக்கு நேற்று காலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் காலை 7 மணியளவில் தகானு அருகே உள்ள ஜரோட்டி பகுதியில் வந்தபோது, பஸ்சின் முன் டயர் பஞ்சரானது. இதையடுத்து டிரைவர் பஸ்சை மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி டயரை மாற்றிக்கொண்டு இருந்தார்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில், லாரியின் முன் பகுதி அப்பளம்போல நொறுங்கியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் ரமேஷ் பாரியா(வயது45), பஸ்சின் கடைசி சீட்டில் அமர்ந்து இருந்த பயணி மதுபென் சோலங்கி (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து காசா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக நேற்று காலை மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story