‘என் மீதான வழக்கை கோவைக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்’ மதுரை ஐகோர்ட்டில் மாவோயிஸ்டு மனு
‘என் மீதான வழக்கை கோவைக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்’ என மதுரை ஐகோர்ட்டில் மாவோயிஸ்டு மனு அளித்துள்ளார்.
மதுரை,
தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சி அளிப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த 2007-ம் ஆண்டில் கியூ பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சேலம் மாவட்டம் பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்த பழனிவேல் உள்பட பலர் மீது போலீசாரை தாக்கியது, ஆயுதச்சட்டம், ஆயுத பயிற்சி அளித்தது உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பழனிவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பல்வேறு பிரிவுகளின்கீழ் என் மீது போடப்பட்ட வழக்கு பெரியகுளம் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை முடிந்தது. இந்தநிலையில் சமீபத்தில் போலீசார் என்னை திடீரென கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, பெரியகுளம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட வழக்கு தற்போது கோவைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
என் மீதான வழக்கின் விசாரணை ஏற்கனவே பெரியகுளம் கோர்ட்டில் நிறைவடைந்துள்ளது. அப்படி இருக்கும்போது அந்த வழக்கின் விசாரணையை மீண்டும் கோவை கோர்ட்டில் தொடங்க வேண்டிய தேவையில்லை. எனவே என் மீதான வழக்கை கோவை கோர்ட்டுக்கு மாற்றிய நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, அனிதாசுமந்த் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து அரசு தரப்பில் பதில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Tags :
Next Story