சனிக்கிழமைகளிலும் ஏ.சி. மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை மேற்கு ரெயில்வே அதிகாரி தகவல்


சனிக்கிழமைகளிலும் ஏ.சி. மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை மேற்கு ரெயில்வே அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 April 2018 5:45 AM IST (Updated: 11 April 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

சனிக்கிழமைகளிலும் ஏ.சி. மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு ரெயில்வே அதிகாரி கூறினார்.

மும்பை,

சனிக்கிழமைகளிலும் ஏ.சி. மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு ரெயில்வே அதிகாரி கூறினார்.

ஏ.சி. மின்சார ரெயில்

மும்பையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது தினமும் சர்ச்கேட்- விரார் இடையே 12 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் வார நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகளுக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதில்லை.

இந்தநிலையில் சமீபத்தில் ஆராய்ச்சி வடிவமைப்பு தர அமைப்பு(ஆர்.டி.எஸ்.ஒ.), ஐ.சி.எப், பெல் நிறுவன அதிகாரிகள் ஏ.சி. மின்சார ரெயிலை ஆய்வு செய்தனர்.

சனிக்கிழமைகளிலும்...


இந்த ஆய்விற்கு பிறகு மேற்கு ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏ.சி. மின்சார ரெயிலில் தானியங்கி கதவுகள் திறக்காமல் இருப்பது போன்ற சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்வதற்கான பணிகளை செய்து வருகிறோம். பணிகள் முடிந்த பிறகு சனிக்கிழமைகளிலும் ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இது குறித்த அறிக்கை ரெயில்வே வாரியத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story