போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த 20 டாக்டர்கள் பணி இடைநீக்கம் மாநில மருத்துவ கவுன்சில் நடவடிக்கை
போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த 20 டாக்டர்களை மாநில மருத்துவ கவுன்சில் பணி இடைநீக்கம் செய்து உள்ளது.
மும்பை,

போலி சான்றிதழ்
மராட்டிய மாநில மருத்துவ கவுன்சிலில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் டாக்டர்கள் பதிவு செய்து உள்ளனர். எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ முதுகலை படிப்பு முடித்த டாக்டர்கள் மாநிலத்தில் டாக்டராக செயல்படுவதற்கு மாநில மருத்துவ கவுன்சிலிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்தநிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்கள் கூடுதல் தகுதிக்காக மாநில மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக மருத்துவ கவுன்சில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் சமர்ப்பித்து இருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தது.
20 பேர் பணி இடைநீக்கம்
இந்தநிலையில், மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை சமர்பித்ததாக கண்டறியப்பட்ட டாக்டர்கள் 20 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் சிவ்குமார் உட்டுரே தெரிவித்து உள்ளார்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட டாக்டர்களில் மும்பையை சேர்ந்தவர்களும் அடங்குவர். இவர்கள் இனி டாக்டர்களாக பணியாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
வேறு சில காரணங்களுக்காக 4 நோயியல் டாக்டர்களின் உரிமத்தையும் மாநில மருத்துவ கவுன்சில் திரும்ப பெற்று உள்ளது.

Related Tags :
Next Story