அய்யனார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ராஜபாளையம் அய்யனார் ஆற்றின் குறுக்கே இரண்டாவதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவ மழை காலங்களில் பெய்யும் கனமழையினால் நீராவியாறு, மலட்டாறு, மாவரசியம்மன் கோவில், முள்ளிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நீர் முதல் தடுப்பணையின் மூலம் ஆறாவது மைல் குடிநீர் தேக்கத்திற்கு குடிநீருக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது குடிநீருக்கு போக மீதமுள்ள தண்ணீர் அய்யனார் ஆற்றின் மூலம் முடங்கியாறு வழியாக இரு பிரிவாக பிரிந்து அருபத்தி, துலுக்கன்குளம், புதுக்குளம், பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டநேரி, கடம்பன் குளம் உள்ளிட்ட கண்மாய்களின் மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன வசதியும், மரூங்கூர், திருச்சுழி, கிருஷ்ணாபேரி, அலப்பசேரி, கருங்குளம், அய்யன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய் போன்ற கண்மாய்கள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்த கண்மாய்களில் இருந்து வரும் நீரினால் விவசாயம் செழித்து நல்ல விளைச்சலை பெற்றுத் தந்தன. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார் ஆற்றின் குறுக்கே இரண்டாவது நீர்த் தேக்கத்திற்காக இரண்டாவது தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த அணையினால் கண்மாய்களுக்கு வரும் தண்ணீர் தடைபட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பணையை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா கூறியதாவது:-
அய்யனார் ஆற்றின் குறுக்கே இரண்டாவது தடுப்பணை கட்டியதின் மூலமாக நீர்வரத்து முற்றிலும் தடைபட்டு கண்மாய்களுக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர்களை காப்பாற்ற அதிக விலை கொடுத்து டிராக்டர்கள், லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலை உள்ளது. ஒரு சில விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி கருகி போனதைக் கண்டு அதனை விறகுக்காக வெட்டி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரண்டாவது தடுப்பணையை அகற்ற நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முன் வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Tags :
Next Story