ஆரணி தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் செம்மரக்கடத்தலில் கைது
ஆரணி தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் செம்மரக்கடத்தலில் கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டுக்கே வந்து, கடப்பா மாவட்ட போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.
ஆரணி,
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மற்றும் கடப்பா மாவட்ட எல்லையையொட்டி சேஷாசலம் வனப்பகுதி உள்ளது. சேஷாசலம் வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் வளர்ந்துள்ளன. அந்தச் செம்மரங்களை ஆந்திரா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வெட்டிக்கடத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த செம்மரக்கடத்தல்காரர்களுக்கு, ஆந்திராவை சேர்ந்த சிலர் கடத்தலுக்குத் துணையாக இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு ஆந்திரா சென்று செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தகவலை கேள்விப்பட்டு உள்ளோம். இருப்பினும், செம்மரக்கடத்தலில் தமிழகத்தில் ஆரணியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் ஈடுபட்டு கடப்பா மாவட்ட போலீசாரிடம் சிக்கிய சம்பவம் ஆரணி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாபுஜி அட்டடா உத்தரவின்பேரில், செம்மரக்கடத்தல்காரர்களை பிடிக்க கடப்பா மாவட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள ஆரணி பாளையம் கே.சி.கே.நகர் பகுதியில் வசித்து வரும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஏ.சி.வி.தயாநிதியின் மகன் சக்தி என்கிற சத்தியநாராயணன் (வயது 36) என்பவர் 2017-ம் ஆண்டு கடப்பா மாவட்ட வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக தெரிய வந்தது.
அவர் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக 32 பிரிவுகளில் வழக்குகள் உள்ளன. செம்மரக்கடத்தலில் தேடப்படுவோர் பட்டியலில் 28-வது நபராக சேர்க்கப்பட்டு இருந்தார். அவரை பிடிக்க கடப்பா மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பி.ஹேமகுமார், ஆர்.வி.கொண்டாரெட்டி ஆகியோர் தலைமையில் போலீசார் எஸ்.சிவராமநாயுடு, ஜி.வெங்கடரமணா, சி.கொண்டய்யா, கே.கிரண்குமார், எம்.சுப்பிரமணியம், பி.கோபிநாயக், பி.ராகேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று பகல் 11.30 மணியளவில் ஒரு ஜீப்பில் கடப்பாவில் இருந்து புறப்பட்டு ஆரணிக்கு வந்தனர்.
ஆரணிபாளையம் பகுதியில் உள்ள சத்தியநாராயணனின் வீட்டுக்கு கடப்பா மாவட்ட போலீசார் சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. செம்மரக்கடத்தலில் தொடர்புடைய அவரின் நண்பரான ஒருவர் மூலம் சத்தியநாராயணனிடம் போலீசார் செல்போன் மூலமாக பேச வைத்தனர். அவர், ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூரில் உள்ள தன்னுடைய சித்தப்பா உறவினர் முறையான மணி என்பவருக்குச் சொந்தமான கருங்கல் ஜல்லிகற்களை உடைக்கும் குவாரியில் இருப்பதாக கூறினார். அந்த நண்பர் வீட்டுக்கு வரும்படி கேட்டுக்கொண்டதும், அவர் தன்னுடைய வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்தார்.
அங்கு, ஏற்கனவே ஜீப்புடன் காத்திருந்த கடப்பா மாவட்ட போலீசார், சத்தியநாராயணனை கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி தாங்கள் வந்த ஜீப்பில் போட்டுக்கொண்டு புறப்பட்டனர். மேலும் அவர் வந்த மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். அந்த மோட்டார்சைக்கிளை கடப்பா மாவட்ட போலீஸ்காரர் ஒருவர் ஜீப்பை பின்தொடர்ந்தபடி ஓட்டிச் சென்றார்.
சத்தியநாராயணனை கடப்பா மாவட்ட போலீசார் கைது செய்து, ஜீப்பில் ஏற்றிச்சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் தங்களிடம் இருந்த செல்போன் மூலமாக படம் பிடித்தனர். அப்பகுதி மக்கள் உடனே முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.சி.வி.தயாநிதிக்கும், சித்தப்பா உறவினர் முறையான மணிக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள், இதுபற்றி ஆரணி போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆரணி போலீசார் உடனே ஆற்காடு, திமிரி போலீசுக்குத் தகவல் தெரிவித்து, கடப்பா மாவட்ட போலீசாரின் ஜீப்பை மடக்கி நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
கடப்பா மாவட்ட போலீசாரின் ஜீப், திமிரியை கடந்து ஆற்காடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தகவல் அறிந்ததும், ஆற்காடு போலீசார் உஷாராகி ஒரு காரில் புறப்பட்டு வந்து, ஆரணி சாலையில் காத்திருந்தனர். அப்போது கடப்பா மாவட்ட போலீசாரின் ஜீப் மற்றும் ஜீப்பை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த போலீஸ்காரரை தடுத்து நிறுத்தி, எதற்காக முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகனை அழைத்துச் செல்கிறீர்கள்? எனக் கேட்டனர். அதற்கு கடப்பா மாவட்ட போலீசார், சத்தியநாராயணன் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்.
எனவே அவரை கைது செய்து விசாரணைக்காக கடப்பா அழைத்துச் செல்கிறோம் என ஆற்காடு போலீசாரிடம் கூறினர். இதையடுத்து கடப்பா மாவட்ட போலீசாரை, ஆற்காடு போலீசார் விடுவித்தனர். இதையடுத்து கடப்பா போலீசார் ஜீப்பை ஓட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. வின் மகனை கடப்பா மாவட்ட போலீசார் கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்ற சம்பவம், ஆரணி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் காட்டுத்தீப்போல பரவியது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story