கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்
திண்டுக்கல்,
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு தினமும் ரூ.432-ம், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.355-ம், மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.625-ம் குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிமுடித்த துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இரவு அனைவரும் அங்கேயே தங்கினர்.
இதையடுத்து 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவி ராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் காத்திருப்பு போராட்டம் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பாடல்களை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் அங்கேயே அமர்ந்து அவர்கள் உணவு சாப்பிட்டனர். பின்னர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story