ஏற்காட்டில் கலெக்டர் ரோகிணி ஆய்வு


ஏற்காட்டில் கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2018 7:24 AM IST (Updated: 11 April 2018 10:16 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

ஏற்காடு,

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று கலெக்டர் ரோகிணி ஆய்வு பணிகள் மேற்கொண்டார். மேலும் ஏரி பூங்கா, மான் பூங்கா, திறந்தவெளி கலையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர் சுற்றுலா பயணிகள் குறைந்த வாடகையில் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலையிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தையும் தொடங்கி வைத்தார். அதன் அருகில் உள்ள அரசு வணிக வளாகத்தில் சுய உதவிக்குழுக்களால் தொடங்கப்பட்டுள்ள கடைகளையும், ஏற்காடு படகு இல்ல ஏரியை சுற்றி நடைபயணம் செய்யும் விதமாக நடைபாதை அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் ரோகிணி கூறுகையில்,“மே 14-ந் தேதி முதல் ஏற்காடு மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும்“ என்றார். இது குறித்த விளக்க நோட்டீசுகளையும் பொதுமக்களிடம் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் தாசில்தார் சுமதி, ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்தர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story