நெல்லையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடங்கியது
நெல்லையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
நெல்லை,
நெல்லையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
காலைக்கதிர் நாளிதழ் சார்பில், பிளஸ்-2-க்கு பின் என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நெல்லை ஐகிரவுண்டு காயிதே மில்லத் கலையரங்கில் நேற்று தொடங்கியது. எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் டீன் டாக்டர் துரைவேலு, கலசலிங்கம் அகாடமி ஆப் ரிசர்ச் அன்ட் எஜூகேசனின் இணை பேராசிரியர் செல்வபழம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் பல்வேறு கல்லூரிகள் அமைத்துள்ள கல்வி கண்காட்சியை ‘ரிப்பன்‘ வெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் துரைவேலு பேசுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக என்ஜினீயரிங் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. இனி கலை-அறிவியல் படித்தால் தான் எதிர்காலம் என நம்புகிறார்கள். மாணவர்கள் பெற்றோர்களின் கட்டாயத்துக்காக இல்லாமல் தாங்கள் விரும்பிய துறைகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்‘ என்றார். பேராசிரியர் செல்வபழம் பேசும்போது, ‘கல்லூரியில் மாணவர்கள் படிக்கும்போதே புத்தக படிப்புடன் செயல்முறை அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் துறை எது என்று பார்த்து அந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்‘ என்றார்.
கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு
கனரா வங்கி முன்னாள் மேலாளர் வணங்காமுடி, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, ஆடிட்டர் சேகர் ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
2-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பேராசிரியர் ஞானசம்பந்தம், கோவிந்தராஜ், திருமகன் ஆகியோர் பல்வேறு துறைகள் குறித்து பேசுகிறார்கள்.
Related Tags :
Next Story