நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி சாவு


நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி சாவு
x
தினத்தந்தி 12 April 2018 3:30 AM IST (Updated: 12 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பத்மராஜ் (வயது 60). இவர் கட்டையன்விளை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் அந்த நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு, சாலையோரமாக  நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பத்மராஜ் மீது மோதியது. இதில் அவரும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கணியாகுளம் பாறையடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்–1 மாணவனும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சாவு

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பத்மராஜ் நள்ளிரவு 11.50 மணிக்கு பரிதாபமாக இறந்தார். மற்றொரு ஆஸ்பத்திரியில் மாணவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (கோட்டார்) அன்பு பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜான், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ஸ்ரீதரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story