கோவில்பட்டி அருகே மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்


கோவில்பட்டி அருகே மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்
x
தினத்தந்தி 12 April 2018 3:00 AM IST (Updated: 12 April 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

மனுநீதி நாள் முகாம்

கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் 16 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 17 பேருக்கு பட்டா மாற்றம், 21 பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, ஒருவருக்கு திருமண உதவித்தொகை, 2 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, 8 பேருக்கு உழவர் பாதுகாப்பு அட்டை, 50 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை உள்பட 137 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதிகாரிகள்

முகாமில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) முத்து எழில், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆனந்த் பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரசுவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, ஆதி திராவிடர் நல அலுவலர் கீதா, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விநாயக சுப்பிரமணியன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, தொழில்மைய பொது மேலாளர் கண்ணன், தாட்கோ மேலாளர் செல்வராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் நன்றி கூறினார்.

Next Story