மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2018 4:15 AM IST (Updated: 12 April 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. விருதுநகர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசியில் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் மேற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் லட்சுமணன், துணை அமைப்பு செயலாளர் ஜானகிராமன் ஆகியோர் விளக்கி பேசினர். நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், காளிதாசன், வெள்ளச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story