மத்திய அரசை கண்டித்து பா.ம.க.வினர் சாலை-ரெயில் மறியல் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் சாலை-ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 1,017 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் காலை 10.40 மணியளவில் விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து பா.ம.க.வினர், ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
இவர்களை ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் போலீசாரின் தடுப்பையும் மீறி அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்றனர்.
அந்த சமயத்தில் காலை 11.15 மணிக்கு ரெயில் நிலைய 1-வது நடைமேடைக்கு வந்த சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி தலைமை தாங்கினார். இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, பா.ம.க. மாநில துணைத்தலைவர் ஹரிகரன், மாவட்ட செயலாளர் புகழேந்தி, தலைவர் ஆதிநாராயணயாதவ், மாநில அமைப்பு துணை செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தன்ராஜ், நகர தலைவர் போஜராஜன், செயலாளர்கள் ராம்குமார், ஹரிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட 350 பேரை கைது செய்து போலீஸ் வேன், அரசு பஸ்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ஏழுமலை தலைமையில் பா.ம.க.வினர், சென்னை- குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் செய்தனர்.
உடனே திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட 188 பேரை கைது செய்தனர்.
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் மாநில துணைத்தலைவர் மணிகண்டன் தலைமையில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மணலூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.
மேலும் திருக்கோவிலூரில் மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமையில் பா.ம.க.வினர் அங்குள்ள தபால் நிலையத்திற்கு திரண்டு சென்று அந்த தபால் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 105 பேரை கைது செய்தனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சியில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தபால் நிலையம் முன்பு சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுதவிர முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு செஞ்சி கடைவீதிகளில் உள்ள கடைகளை மூடச்சொல்லி நகர செயலாளர் சிவா தலைமையில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற 24 பேரும், உளுந்தூர்பேட்டையில் மாவட்ட துணைத்தலைவர் பாண்டியன் தலைமையில் கடைகளை மூட வலியுறுத்தி அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற 50 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து 7 இடங்களில் நடந்த போராட்டத்தில் பா.ம.க.வினர் 1,017 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story