கோத்தகிரி அருகே கரடி நடமாட்டம்; பொதுமக்கள் பீதி
கோத்தகிரி அருகே கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் அப் பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு காமராஜர் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும், புதூர் கிராமத்தில் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்களாக உள்ளதால் தேயிலை பறிக்கும் பணிக்கும், தேயிலை தொழிற்சாலைகளுக்கும் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் போதிய பஸ் வசதியில்லாததால் இங்குள்ள சாலை வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரவேனு பகுதிக்கு நடந்து சென்று அங்கிருந்து கோத்தகிரியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த ஒரு வருடகாலமாக இந்த கிராம பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. கரடிகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருவதுடன் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந் துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று பகல் நேரத்திலேயே தேயிலை தோட்டங்களுக்குள் நடமாடி வருவதுடன் காமராஜர் நகரில் உள்ள முருகன் கோவில் வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள கோவிலின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது. அந்த வழியாக சென்று விளக்கு திரிகளை தின்பதோடு, விளக்கில் உள்ள எண்ணெயையும் குடித்து வருகிறது.
இதே போல புதூர் கிராம விநாயகர் கோவிலுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இது குறித்து காமராஜர் நகர் முன்னாள் கவுன்சிலர் மனோகரன் கூறியதாவது:-
கடந்த ஆண்டு கரடி தாக்கியதில் காமராஜர் நகரை சேர்ந்த சின்னதம்பி என்பவர் படுகாயமடைந்தார். அதில் இருந்து இதுநாள் வரை கரடிகளின் நடமாட்டம் தொடர்ந்து இப்பகுதியில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் 2 பேர் அரவேனுவிலிருந்து காமராஜர் நகர் செல்லும் சாலையில் நடந்து செல்லும் போது சாலையின் நடுவே கரடி நிற்பதை கண்டு அலறியடித்து தப்பிச் சென்றனர். இரவு நேரத்தில் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்கள் கொளுத்தியும் கரடியை விரட்டும் பணியில் ஈடுபட வேண்டி உள்ளது. எனவே கரடிகளால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் கிராமத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இல்லையெனில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story