சேலம் மாவட்டத்தில் 8 பஸ்களின் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது


சேலம் மாவட்டத்தில் 8 பஸ்களின் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 4:15 AM IST (Updated: 12 April 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 8 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டது. அதன்படி நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. எடப்பாடியில் நேற்று அதிகாலை மேட்டூர் சென்ற அரசு பஸ், பவானியிலிருந்து எடப்பாடி வந்து கொண்டிருந்த தனியார் பஸ், எடப்பாடியிலிருந்து சேலத் திற்கு சென்ற தனியார் பஸ் ஆகிய 3 பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் மர்ம நபர்களால் கல்வீசி உடைக்கப் பட்டன. எடப்பாடி பகுதியில் இந்த சம்பவங்கள் நடை பெற்றன.

எடப்பாடி பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் வெளியூர் செல்வதற்கு காலையிலேயே அதிக ளவில் நிறுத்தப் பட்டி ருந்தன. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. காலையில் ஒருசில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பின்னர் காலை 8 மணியளவில் அந்த கடைகளும் மூடப்பட்டன.

மேலும் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களும் இயங் காமல் விசைத்தறி தொழிலா ளர்கள் முழு அடைப்பில் கலந்து கொண் டனர். இதே போல் கொங்க ணாபுரம், எட்டிக்குட்டை மேடு, பூலாம் பட்டி ஆகிய இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்தன.

இதற்கிடையே பஸ் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக பிரகாஷ் (வயது 30), தாண்டவன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓமலூர் பயணியர் மாளிகை அருகே தர்மபுரியில் இருந்து சேலத்தை நோக்கி சென்ற தனியார் பஸ்சின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்தனர்.

மேச்சேரி, நங்கவள்ளி, வனவாசி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. மேச்சேரியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் ஆயிரக்கணக்கான பொது மக்களும், வியாபாரி களும் கலந்து கொண்டு விற்பனை செய்வர். முழு அடைப்பை யொட்டி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டுச்சந்தைக்கு குறைவான ஆடுகளும், வியாபாரிகளுமே வந்திருந்தனர். தனியார் பஸ்கள் இயங்கவில்லை.

கிருஷ்ணகிரியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசு பஸ் மீது மேச்சேரி காளிக் கவுண்டனூர் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதேபோல மேச்சேரியில் இருந்து மூலக்காடு சென்ற அரசு டவுன் பஸ் அமரம்திட்டு அருகில் சென்றபோது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். ஓமலுாரில் இருந்து மேச்சேரி நோக்கி வந்த அரசு டவுன் பஸ், மேச்சேரி அருகே சந்திரமாக்கடை பஸ்நிறுத்தம் அருகில் சென்றபோது மர்்மநபர்கள் முன்பக்க கண்ணாடியை கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். மேச்சேரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் சாத்தாப்பாடி அருகில் சென்றபோது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story